ஒருவரின் வருமானம் மற்றும் சேமிப்புக்கு மேல் கூடுதல் நிதி தேவைப்படுவது ஒரு பொதுவான நிகழ்வுதான், குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்துவரும் தேவைகளுடன். இந்த நிதிகளைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும், மிகவும் விரும்பப்படும் ஒரு வழி தனிநபர் கடன். விரைவான ஒப்புதல்கள் மற்றும் விரைவான பணப்பட்டுவாடாக்கள் ஆகியவை நிதிகளைப் பெறுவதற்கு இலாபகரமான வழியாக உருவாக்குகின்றன. ஆனால் இது இந்த வகையிலான ஒரே கடன் அல்ல. சொத்து மீதான கடன் (எல்ஏபி) என்பது ஒரு வகையான நிதி ஆதாரமாகும், இதே போன்ற நன்மைகளை கொண்டுள்ளது ஆனால் பரவலாக அறியப்படவில்லை.
சொத்து மீதான கடன் என்பது ஒரு அடமானக் கடன் வடிவமாகும், இது வீட்டுக் கடன் கடமையின் கீழ் உள்ள சொத்துக்கு எதிராக நிதி நிறுவனத்திலிருந்து கடன் வாங்கப்படுகிறது. கருத்தில் கொள்ளப்படும் அந்த சொத்து அதன் நடைமுறையிலுள்ள சந்தை மதிப்பை உறுதிப்படுத்துவதற்காக மதிப்பீடு செய்யப்படுகிறது மற்றும் இந்த மதிப்பின் சதவீதம் கடன் வடிவத்தில் வழங்கப்படுகிறது, இது லோன் டு வேல்யூ (எல்டிவி) என்று அழைக்கப்படுகிறது. திருப்பிச் செலுத்தும் திறன், கடனுக்கான காரணம் போன்ற மற்ற காரணிகளும் உள்ளன, அவை தொகையை ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர் மதிப்பீடு செய்யப்படுகின்றன. முன்னரே தீர்மானிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட தவணைக்காலத்திற்கு சமமான மாதாந்திர தவணைகள் (இஎம்ஐ-கள்) மூலம் கடன் திருப்பிச் செலுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் குழந்தைகளின் திருமணம், தொழில் கடன், கல்வி மற்றும் இதேபோன்ற பல காரணங்களுக்காக எல்ஏபி-ஐ பெறலாம்.
தனிநபர் கடன் என்பது ஒரு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனம் (என்பிஎஃப்சி) தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய தனிநபர்களால் எடுக்கப்படும் கடன் வகையாகும். வருமான அளவு, கடன் மற்றும் வேலைவாய்ப்பு வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன் போன்றவை தனிநபர் கடன்களைப் பெறும்போது முக்கியமான அளவுகோல்களாகும். அத்தகைய கடன்களுக்கு அடமானம் தேவையில்லை என்பதால், கடன் வாங்குபவர் தங்கம் அல்லது சொத்து போன்ற எந்தவொரு அடமானத்தையும் வைக்க தேவையில்லை.
இருப்பினும், தனிநபர் கடன்கள் மீதான வட்டி விகிதங்கள் பொதுவாக மற்ற கடன்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், ஏனெனில் அவை அடமானமற்றவை மற்றும் நிதி நிறுவனம் இந்த கடன்களை வழங்கும் போது அதிக ஆபத்தை எதிர்கொள்கிறது. தனிநபர் கடன்களின் தவணைக்காலம் பொதுவாக சொத்து மீதான கடனை விட குறைவாக இருக்கும்.
படிக்க வேண்டியவை: ஒரு வீட்டை வாங்குவதற்கு சரியான நேரத்திற்கு காத்திருக்கிறீர்களா? சரியான நேரம் இப்போது!
இரண்டின் முக்கிய அம்சங்களையும் விரிவாக பார்ப்போம்:
எல்ஏபி-ல் அதிக தவணைக்காலம் வெர்சஸ் தனிநபர் கடன்: எல்ஏபி ஒரு அடமானக் கடனாக இருப்பதால் வயது, வருமானம் மற்றும் பிற சொத்து மீதான கடனுக்கான விண்ணப்பதாரரின் தகுதி வரம்பு ஆகியவற்றைப் பொறுத்து வங்கிகள் 15 ஆண்டுகள் வரை நீண்ட தவணைக்காலத்தை வழங்குகின்றன. நீண்ட தவணைக்காலம் இஎம்ஐ-ஐ குறைக்கிறது, எனவே வாடிக்கையாளரிடம் போதுமான பணப்புழக்கம் இருக்கிறது. மறுபுறம், தனிநபர் கடன்கள் பொதுவாக 5 ஆண்டுகள் வரை மட்டுமே வழங்கப்படுகின்றன.
ஒப்புதலளிக்கப்பட்ட கடன் தொகை: விண்ணப்பதாரர் சொத்து மீதான எல்ஏபி-ஐ பெறுவதால், நிதி நிறுவனங்கள் ஒரு பிசிக்கல் சொத்து வடிவத்தில் அடமான நன்மையைக் கொண்டுள்ளன. எனவே அவர்கள் கணிசமான தொகையை கடனாக செலுத்த விரும்புகின்றனர். இருப்பினும், இது சொத்துக்களின் தற்போதைய மதிப்பு மற்றும் அடமானத் தன்மைக்கு உட்பட்டது. தனிநபர் கடன்களில், அதிகபட்ச கடன் தொகை கணிசமாக குறைவாக உள்ளது, பொதுவாக ₹ 15-20 லட்சம் வரம்பில், மற்றும் முக்கியமாக தனிநபரின் வருமானத்தைப் பொறுத்தது.
வழங்கப்படும் வட்டி விகிதங்கள்: விண்ணப்பதாரரின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் வழங்கப்படும் வட்டி விகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. எல்ஏபி-ல் ஆபத்து நிலை காரணமாக தனிநபர் கடனுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. முன்னர் விளக்கப்பட்டபடி, எல்ஏபி ஒரு அடமானக் கடனாக இருப்பதால், நிதி நிறுவனம் வழங்கப்பட்ட தொகையின் மீது குறைந்த விகிதத்தை விதிக்கிறது. மேலும், நிதி நிறுவனங்கள் எல்ஏபி-யில் ஃப்ளோட்டிங் விகிதத்தின் விருப்பத்தை வழங்குகின்றன, அதாவது, வட்டி விகிதங்கள் குறையும் போது, வாடிக்கையாளருக்கு நன்மை வழங்கப்படும்.
தனிநபர் கடன்களில் விரைவான பட்டுவாடா: தனிநபர் கடன்கள் எல்ஏபி-ஐ விட விரைவாக பட்டுவாடா செய்கின்றன, எல்ஏபி-ல் சொத்தின் மதிப்பு மதிப்பீட்டுடன் உரிய மதிப்பீடு பின்பற்றப்படுகிறது. இருப்பினும் நிதி நிறுவனங்கள் தங்கள் டர்ன்அரவுண்ட் நேரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளன மற்றும் தற்போதைய சூழ்நிலையில் சராசரியாக 7 நாட்களுக்குள் எல்ஏபி-ஐ வழங்க முடியும்.
கூடுதலாக படிக்க: ஃபிக்ஸ்டு vs ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் – உங்களுக்கு எது சிறந்தது
முன்கூட்டியே செலுத்தும் நெகிழ்வுத்தன்மை: வாடிக்கையாளர்கள் எந்தவொரு முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் இல்லாமல் பெறப்பட்ட எல்ஏபி-யில் பல பகுதியளவு பணம்செலுத்தல்களை செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை கொண்டுள்ளனர், ஆனால் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன். இருப்பினும், தனிநபர் கடன்களின் விஷயத்தில் இந்த வசதி பலமுறை கிடைக்கவில்லை.
டாப் அப் கடன் வசதி: வாடிக்கையாளர் ஏற்கனவே சொத்து மீதான கடனை பெற்றிருந்தால், ஆனால் அதிகபட்ச வரம்பு வரை இல்லை என்றால், நிதி நிறுவனத்தின் அனைத்து சரியான அங்கீகாரத்திற்கு பிறகு, அவர் தற்போதைய கடன் மீது டாப் அப் பெறலாம்.
எல்ஏபி மற்றும் தனிநபர் கடன்கள் இரண்டும் தங்கள் சொந்த நன்மைகள் மற்றும் குறைபாடுகளைக் கொண்டிருக்கும் போது, விண்ணப்பதாரர் வசதி, சலுகை மீதான வட்டி விகிதம், செயல்முறை நேரம் மற்றும் தேவையான தொகை ஆகியவற்றின் அடிப்படையில் முடிவை எடுக்கலாம்.
எழுத்தாளர் : ஷாஜி வர்கீஸ்
(அங்கீகாரதாரர் என்பவர் பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் பிசினஸ் தலைவர் ஆவார்)