PNB Housing Finance Limited

என்எஸ்இ:

பிஎஸ்இ:

கடைசி புதுப்பித்தல்:

()
சராசரி மதிப்பீடு
பகிரவும்
நகலெடுக்கவும்

கார்ப்பரேட் நிலையான வைப்புத்தொகைகள் – நன்மைகள், வரிகள் மற்றும் பாதுகாப்பு

give your alt text here

நிலையான வைப்புத்தொகைகள், பொதுவாக எஃப்டி-கள் என்று அழைக்கப்படுகின்றன, இது நல்ல வருமானத்தை அளிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்வதற்கு மிகவும் விரும்பப்படும் கருவிகளில் ஒன்றாகும்.

பெருநிறுவனங்கள் மற்றும் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் (எச்எஃப்சி) வழங்கும் எஃப்டி-கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வட்டி விகிதத்தை வழங்குகின்றன மற்றும் மூத்த குடிமக்கள் போன்ற சில பிரிவுகளுக்கு சிறப்புத் திட்டங்களை கூட வழங்குகின்றன. இது நிறுவனங்களுக்கு நிதி திரட்டவும், வணிக நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்தவும் உதவுகிறது, மறுபுறம், வைப்பாளர்கள் தங்கள் முதலீட்டில் உறுதியளிக்கப்பட்ட வட்டி வருமானத்தை அனுபவிக்கின்றனர்.

ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பேங்க் எஃப்டி-களைக் காட்டிலும், கார்ப்பரேட் எஃப்டி அல்லது எச்எஃப்சி-கள் வழங்கும் நிலையான வைப்புகளில் முதலீடு செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பது போன்ற சில காரணிகளில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்கலாம். அவை எவ்வளவு பாதுகாப்பானவை மற்றும் இந்த வருமானங்களுடன் ஏதேனும் வரி விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளனவா? இதற்கான பதில்களை இங்கே பார்ப்போம்..

கார்ப்பரேட் எஃப்டி-யில் முதலீடு செய்வதன் நன்மை:

  • மூலதனச் சந்தை அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை விரும்பாதவர்களுக்கு, நிலையான வைப்புக்கள் பாதுகாப்பான முதலீடாக இருப்பதால் அதுவே சரியான தேர்வாகும். எஃப்டி விகிதங்களில் எந்தவொரு மாற்றமும் புதிய முதலீட்டாளர்களை மட்டுமே பாதிக்கும். அதில் கூட, கார்ப்பரேட்கள் மற்றும் எச்எஃப்சி-கள் மூலம் வழங்கப்படும் நிலையான வைப்புத்தொகைகள் வங்கி எஃப்டி-களை விட ஒப்பீட்டளவில் அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. பிஎன்பி ஹவுசிங் எஃப்டி விகிதங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்
  • முதலீட்டாளர்கள் தங்கள் வைப்புகள் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு லாக் செய்யப்படுவதால் கவலைப்பட வேண்டியதில்லை, இதன் போது அவர்கள் விரும்பும் ஒட்டுமொத்தம் அல்லாத வட்டி செலுத்தலை தேர்வு செய்யலாம் — மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் — அல்லது ஒட்டுமொத்தம், அசல் தொகை மற்றும் மொத்த வட்டி மெச்சூரிட்டியின் போது செலுத்தப்படும்
  • நிலையான வைப்புத்தொகையின் திறன் கூட்டு வட்டியில் உள்ளது, இங்கு ஒரு காலத்திற்குள் சம்பாதித்த பணம் மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது
  • பல வைப்புத்தொகைகளைக் கொண்டுள்ள கார்ப்பரேட்கள் மற்றும் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள புரோக்கர்கள் மற்றும் உறவு மேலாளர்களின் பரந்த நெட்வொர்க் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவையை வழங்குகின்றனர். பிஎன்பி ஹவுசிங் உடன், நீங்கள் கணக்கு அறிக்கையைப் பெறுவதற்கும், கேள்விகளை எழுப்புவதற்கும், அதிகாரிகளின் வாடிக்கையாளர் போர்ட்டல் மூலம் நேரடி சாட் மூலம் அவர்களுடன் பேசவும் முடியும். எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் உங்கள் வைப்புத்தொகையை தானாகவே புதுப்பித்தல் போன்ற அம்சமும் கிடைக்கிறது.

பாதுகாப்பு:

  • அனைத்து நிறுவனங்களும் எச்எஃப்சி-களும் இந்தியாவில் வைப்புகளை வழங்க முடியாது. அபெக்ஸ் அமைப்புகள் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்குகின்றன, அதன் பிறகுதான் அவர்கள் பொதுமக்களிடமிருந்து டெபாசிட்களை ஏற்க முடியும்
  • கார்ப்பரேட் எஃப்டி-கள் மற்றும் எச்எஃப்சி-களால் வழங்கப்படுபவை பல்வேறு காரணிகளைப் பொறுத்து கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளால் மதிப்பிடப்படுகிறது.. ‘ஏஏஏ’ அல்லது அதற்கும் அதிகமாக மதிப்பிடப்பட்ட நிலையான வைப்புத்தொகைகள் அதிக அளவிலான பாதுகாப்பைக் குறிக்கின்றன மற்றும் முதலீட்டாளர்களால் பரிசீலிக்கப்படலாம். பிஎன்பி ஹவுசிங் நிலையான வைப்புத்தொகையின் கடன் மதிப்பீட்டை தெரிந்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும்
  • எஃப்டி-கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகின்றன, இருப்பினும், எந்தவொரு குறைந்தபட்ச அபாயங்களையும் குறைக்க பரிவர்த்தனையை செயல்படுத்துவதற்கு முன்னர் கடன் மதிப்பீடுகளுடன் நிறுவனத்தின் அடிப்படைகள், நிதி தன்மைகள், புகழ் மற்றும் பிராண்ட் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்

வரி பொறுப்பு:

  • வங்கி எஃப்டி-களைப் போலவே, கார்ப்பரேட் எஃப்டிகள் மற்றும் எச்எஃப்சி-கள் வழங்கும் நிலையான வைப்புத்தொகை ஆகியவற்றில் பெறப்படும் வட்டி, வைப்புத்தாரரின் அதிக வருமான வரி வரம்பில் வரி விதிக்கப்படும். இருப்பினும், வைப்புத்தொகையிலிருந்து வருடாந்திர வட்டி வருமானம் ₹ 5,000 க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே முதலீட்டாளர் வரி செலுத்த வேண்டும்.

நிறுவனங்கள் மற்றும் எச்எஃப்சி ஆகியவற்றால் வழங்கப்படும் எஃப்டி-க்கள் பல்வேறு நன்மைகள் மற்றும் அற்புதமான வருமான விகிதத்தை கொண்டுள்ள சிறந்த விருப்பமாக இருக்கலாம், கிட்டத்தட்ட பெரும்பாலான இந்திய முதலீட்டு கருவிகள் வழங்குவதற்கு இணையாக அதுவும் குறைந்த அபாயத்துடன் இவை வழங்குகிறது. இருப்பினும், உங்களுக்கு பிடித்த நிலையான வைப்புத்தொகையை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்வது விவேகமானது.

வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் பெறுங்கள் வெறும்
3 நிமிடங்கள், சிக்கலின்றி செயல்முறை!

பிஎன்பி ஹவுசிங்

ஆராய வேண்டிய மற்ற தலைப்புகள்

Request Call Back at PNB Housing
கால் பேக்